வில்லுக்குறி பகுதியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

வில்லுக்குறி பகுதியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-30 19:13 GMT

திங்கள்சந்தை, 

வில்லுக்குறி பகுதியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கைது

தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசேகர் தலைமையிலான போலீசார் நேற்று வில்லுக்குறி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வில்லுக்குறி அரசு தொடக்கப்பள்ளி முன்பு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரித்த போது திருவிடைக்கோடை சேர்ந்த விஷ்ணுகுமார் (வயது19) என்றும், மோட்டார் சைக்கிளில் 180 கிராம் கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்