ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா தடுத்து நிறுத்தம்

ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Update: 2024-12-16 03:54 GMT

ஸ்ரீவில்லிப்புத்தூர்,

புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் திவ்ய பாசுரம் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரியில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார். அதன் பின்னர் அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.   

அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார். வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜா கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்