சுதந்திர தின பூங்கா அருகே 3½ கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது - 5 கத்திகள் பறிமுதல்

சுதந்திர தின பூங்கா அருகே 3½ கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்து 5 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-09 09:16 GMT

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். வள்ளுவர்கோட்டம் சுதந்திர தின பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக நின்றிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனையிட்டார். இதில் அவரிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த முகமது ரபி என்ற மிட்டாய் ரவி (வயது 22) என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்