போக்சோ வழக்கில் வாலிபர் கைது
சுரண்டையில் போக்சோ வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சுரண்டை::
சுரண்டை காந்தி பஜார் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் அழகுபாரதிராஜா (வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 14 வயது மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் தந்தை, அழகு பாரதிராஜாவிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அழகுபாரதிராஜாவை கைது செய்தார். பின்னர் அவர் ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.