ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை மிரட்டிய வாலிபர் கைது

திருக்கடையூரில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-04-04 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிஷேக கட்டளையை சேர்ந்தவர் ஸ்டீபன் பிரபாகரன் (வயது41). இவருடைய மனைவி அனிதா என்பவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஸ்டீபன் பிரபாகரன், தனது மனைவியை சிகிச்சைக்காக அருகில் உள்ள திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சுகாதார செவிலியர் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் வடக்கட்டளை தெருவை சேர்ந்த அருண்குமார் மனைவி சிவரங்கனி என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அப்போது ஸ்டீபன் பிரபாகரன் செவிலியர் சிவரங்கனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் தடுத்ததோடு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செவிலியர் அளித்த புகாரின் பேரில் பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன் பிரபாகரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்