மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Update: 2022-09-16 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(58). இவர் சம்பவத்தன்று திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிபன் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்த நிலையில் நேரு வீதி மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திண்டிவனம் ஓ.பி.ஆர். பார்க் பின்புறம் பகுதியை சேர்ந்த பிந்து முருகன் மகன் அஜய்(வயது 24) என்பதும், கண்ணதாசனுக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்