மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-15 17:26 GMT

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35) என்பதும், ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்