மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தாந்தோணிமலை திண்ணப்பா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). இவர் சம்பவத்தன்று ஏ.ஜி.பி. நகர் அருகே உள்ள கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனை தாந்தோணிமலையை சேர்ந்த கார்த்திக் (26) திருடினார். இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.