மோட்டார் திருடிய வாலிபர் கைது

மோட்டார் திருடிய வாலிபர் கைது

Update: 2023-05-11 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 35). ஜமீன் கோட்டாம்பட்டியில் இவருக்கு சொந்தமான தறி குடோன் உள்ளது. இந்த நிலையில் ராஜ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 2 மாதங்களாக தறியை இயக்கவில்லை. இதற்கிடையில் குடோனுக்கு சென்று ஆழ்துளை கிணற்றிற்கு மோட்டாரை போட்டு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியதாக தெரிகிறது. பின்னர் நேற்று முன்தினம் சென்று பார்த்த போது மோட்டார் அறையின் கதவு திறந்து கிடந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 மோட்டார்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (27) என்பவர் மோட்டாரை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்