பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-28 19:27 GMT

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

மார்த்தாண்டம் பகுதியில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி விட்டனர். மேலும் இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

அப்போது வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நகையை பறித்த ஆசாமிகளின் உருவம் பதிவாகியிருந்தது.

அதன் மூலம் துப்பு துலக்கியதில் இருவரும் கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதில் ஜினீஸ் (28) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர் மீது மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் ஜினீசை கைது செய்தனர். மேலும் ஜினீஸின் நண்பரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்