நகை பறித்த வாலிபர் கைது

திருமணம் செய்வதாக கூறி நகை பறித்த வாலிபரை போலீசார் செய்தனர்.

Update: 2022-12-23 20:26 GMT

தாயில்பட்டி, 

பரமக்குடியை சேர்ந்த நாகரத்தினம் மகன் கார்த்திக்ராஜ் (வயது 26). இவர் ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை திருமணம் செய்வதாக பழகி அவரிடம் இருந்து 5 பவுன் நகையை பெற்று கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஏழாயிரம் பண்ணை போலீஸ், விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த கார்த்திக்ராஜை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி இதுவரை 80 பவுன் நகை பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்