செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

செல்போன்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-04 18:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 50). இவர் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் கட்டுமான பணிகளுக்கு பீகார் மாநில தொழிலாளர்களை வைத்து எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். இதற்காக அவர் கட்டிடத்திலேயே தொழிலாளர்களுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு எழுந்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர் அங்கு நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த நபர் கணேஷ் வைத்திருந்த செல்போனை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் செல்போனை திருடயது கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் என்ற போக்கஸ்(31) என்பது தெரிந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதேபோல் கட்டிட வேலைகள் நடக்கும் இடங்களுக்கு சென்று தொழிலாளர்கள் தூங்கும்போது அவர்களுடைய செல்போன்களை சதீஷ் திருடி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்