கருவேப்பிலங்குறிச்சி அருகேபெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

கருவேப்பிலங்குறிச்சி அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-29 20:23 GMT


விருத்தாசலம்,

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு, 8 மணி அளவில் சத்தியவாடி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பிரியதர்ஷினியின் கையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இது குறித்து அவர் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், பிரியதர்ஷினியிடம் இருந்து செல்போனை பறித்து சென்றவர், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் லெனின் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்