மோட்டார் சைக்கிளில் கர்நாடக மது பாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது
பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் கர்நாடக மது பாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேரணாம்பட்டு அருகே தமிழக எல்லையான பத்தலப்பல்லி போலீஸ் சோதனைச்சாவடியில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து பத்தலப்பல்லி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் ஆந்திர மாநிலம் வீ.கோட்டாவில் இருந்து ரூ.9 ஆயிரத்து 500 மதிப்பிலான கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது 25) என்பவர் கடத்தி வந்தது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் 95 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.