சாராயம் கடத்திய வாலிபர் கைது

நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-28 17:22 GMT

நாகூர்:

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது. பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில் அவர், ஆழியூர் சன்னதி தெருவை சேர்ந்த ராமசாமி மகன் வினோத் (வயது 24) என்பதும், அவர் காரைக்காலில் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ேமாட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்