கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் விற்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-20 18:11 GMT

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புது ஓட்டல் தெருவில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ரஞ்சித் (வயது 32) என்பதும் மது மற்றும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கர்நாடக மாநில 96 மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்