கர்நாடகா மாநில மது விற்ற வாலிபர் கைது

கர்நாடகா மாநில மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-17 17:13 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், அரசு மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணான்டப்பட்டி சுடுகாடு அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 38) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கர்நாடக மாநில 10 மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்