சித்தப்பாவை கொலை செய்த வாலிபர் கைது
ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு உதயகுமார் (வயது 65) என்பவர் விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து இறந்து விட்டதாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சொத்து தகராறில் படகுப்பம் பகுதியைச் அவரது தம்பி சிவக்குமார் மகன் மணிகண்டன் (33) அவரை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.