மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-26 16:01 GMT

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று உடல்நலம் பாதித்த 10-ம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் சிகிச்சைக்காக வந்தார். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல் முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்த ரோகித் (வயது 21) என்பவர், ஆசைவார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்