மூதாட்டியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

போலீஸ்காரர் எனக்கூறி, மூதாட்டியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-20 16:47 GMT

சின்னமனூர் கருங்கட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 85). நேற்று முன்தினம் இவர், சின்னமனூர் போலீஸ் குடியிருப்பு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், தன்னை போலீஸ்காரர் எனக்கூறி, பாத்திமா வைத்திருந்த துணிப்பையை சோதனை செய்தார். பின்னர் அவர், திடீரென அந்த பையில் இருந்த ரூ.3 ஆயிரம், ரேஷன் கார்டு மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாத்திமா, இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தேனி அருகே உள்ள கோட்டூர் மண்டுகருப்பண்ண சாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு (35) என்பவர் பாத்திமாவிடம் பணம், செல்போன் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்