பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-06 19:24 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் கோவில் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பொதுமக்களை அவதூறாக பேசியும், சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார். இது குறித்து பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மது போதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்தவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணி மகன் ராஜேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது. இதனையெடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்