பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காந்தி சிலை அருகே கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 20) என்பவர் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்கின்ற வகையில் நடந்து கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் ஹரிஹரன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.