கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

வடலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-27 18:45 GMT

வடலூர்

வடலூர் அருகே மேட்டுக்குப்பம் பள்ளிக்கூட தெருவில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி ஜோதி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கோவிலை திறக்க வந்தபோது, கோவில் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் அதில் இருந்த பணத்தை காணவில்லை. உடனே அவர் இதுகுறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாா். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் சந்துரு (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்துருவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்