தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-08-20 18:45 GMT


ரிஷிவந்தியம், 

வாணாபுரம் அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அய்யப்பன் (வயது 44). செங்கல் சூளை தொழிலாளி. சம்பவத்தன்று அய்யப்பனும், செங்கல் சூளை உரிமையாளர் விஜி என்பவரும் யால் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிவேல் (31) என்பவரிடம் பாக்கி பணம் கேட்டுள்ளனர்.

அப்போது மணிவேல் ஆத்திரமடைந்து, நீ எதற்காக பணம் கேட்கிறாய் என்று கூறி அய்யப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்