தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

Update: 2023-07-19 19:15 GMT

கோவை

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சக்திராஜா (வயது 40). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடன் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (27) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வேலை காரணமாக வெளியே சென்ற சக்திராஜாவின் செல்போனுக்கு சுரேஷ் தொடர்பு கொண்டு பேசினார். அபபோது அவர் திடீரென்று இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சக்திராஜா, சுரேஷை தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் அவர் கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அங்கு கிடந்த இரும்புக்கம்பியால் சக்திராஜாவை தாக்கினார். இது குறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்