கள்ளக்குறிச்சியில்பெண்களிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
கள்ளக்குறிச்சியில் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி நடுத்தக்கா தெருவில் வசிப்பவர் பாஷா உசேன் மனைவி ஹபிபுன்னிஷா (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அகரத்தான்கொல்லைத் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் ஹரிபிரசாத் (22) என்பவர், ஹபிபுன்னிஷா, அவரது தங்கையையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த பல்பை உடைக்க முயற்சி செய்ததுடன், தெருவில் யாரும் வரக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஹபி புன்னிஷா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் ஹிபிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.