இளம் செஞ்சிலுவை சங்க துணைக்குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்

இளம் செஞ்சிலுவை சங்க துணைக்குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-05 19:00 GMT

பெரம்பலூர் மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்கத்தின் 2022-23-ம் கல்வி ஆண்டின் செயல்பாடுகளை வரையறை செய்யும் பொருட்டு, அச்சங்கத்தின் துணைக்குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெகநாதன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த கல்வியாண்டின் வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், நடப்பு கல்வியாண்டின் செயல் திட்டங்களை வேப்பூர் கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்கத்தின் அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் விரிவாக விளக்கி பேசினார். ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஜோதிவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்