மழை வேண்டி பீம ேவஷம் அணிந்து வந்த இளைஞர்கள்

நயினார்கோவில் அருகே மழை வேண்டி பீம ேவஷம் அணிந்து இளைஞர்கள் ஊர்வலமாக சென்றார்.

Update: 2023-04-03 18:45 GMT

நயினார்கோவில்,

நயினார்கோவில் அருகே தாளையடிகோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி மழை வேண்டி பீம வேஷம் அணிந்து இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது சிறுவர்கள் உடம்பு முழுவதும் கரியை பூசிக்கொண்டு பீமன், அசுரனை விரட்டி அடிப்பது போன்று வீதியில் உலா வருவது வழக்கம். கிராம மக்கள் இதனை வரவேற்று கருப்பட்டியுடன் கூடிய பச்சரிசியை பீமனுக்கும் திரவுபதி அம்மனுக்கும், அசுரன் வேடம் போட்ட இளைஞர்களுக்கும் படைத்தனர். அத்துடன் நெல், மிளகாய் போன்ற விவசாய பொருட்களை திரவுபதி அம்மன் கோவிலுக்கு வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்