ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-06 18:40 GMT

தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 45 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 56 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி வெச்சிருக்க வேண்டும். சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் கிடையாது. பணி நாட்களுக்கான தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும். 45 நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்