காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-02 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மேலாண்மை குழு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை 33 இடைநிலை ஆசிரியர்கள், 17 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 51 ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்(பணி நிபந்தனைகள்) சட்டத்தின் படி முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது.

நாளை மறுநாளைக்குள்

அதன்படி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கள்ளக்குறிச்சி பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்