கயத்தாறு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி
கயத்தாறு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.
கயத்தாறு:
கடம்பூர் ஜார்ஜ் நடுநிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. மூலிகை கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நிகழ்ச்சியில் கயத்தாறு வட்டார மருத்துவர் ராஜ்குமார், சித்த மருத்துவர்கள் டாக்டர்கள் விமலா, மணிமங்கலம் மற்றும் மருந்தாளுநர்கள் சுப்பிரமணியண், ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.