விருத்தாசலம் செந்தில் மெட்ரிக்பள்ளியில் யோகா தினம்
விருத்தாசலம் செந்தில் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் செந்தில் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் திவ்யா கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்து யோகா செய்வதால் ஏற்படும் பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் செந்தில் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் தங்கராஜு, கவிதா தங்கராஜு, பொறியாளர் பிரதீப் மற்றும் பள்ளியின் முதல்வர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.