திருச்செங்கோட்டில் ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்

Update: 2023-07-01 18:45 GMT

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 599 முதல் ரூ.9 ஆயிரத்து 299 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 339 முதல் ரூ.7 ஆயிரத்து 702 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10,009 முதல் ரூ.14 ஆயிரத்து 202 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 2,500 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்