கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 2,134 பேர் எழுதினர்

Update: 2022-12-04 18:45 GMT

சங்கராபுரம்

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட 6 தாலுகாக்களில் எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்த 3 ஆயிரத்து 285 பேரில் 2,134 பேர் தேர்வு எழுதினர். 1,151 பேர் தேர்வு எழுதவில்லை.

சங்கராபுரம் தாலுகாவில் 13 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆய்வு செய்தார். உடன் கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான ஷெர்லி ஏஞ்சலா, தாசில்தார் சாவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அனந்தசயனன், மண்டல துணை தாசில்தார் சேகர், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்த 1,299 பேரில் 803 பேர் தேர்வு எழுதினர். 496 பேர் தேர்வு எழுதவில்லை.

இதேபோல் கள்ளக்குறிச்சி தாலுகாவில் 430 பேருக்கு 291 பேரும், சின்னசேலம் தாலுகாவில் 322 பேருக்கு 238 பேரும், கல்வராயன்மலை தாலுகாவில் 89 பேருக்கு 51 பேரும், திருக்கோவிலூர் தாலுகாவில் 460 பேருக்கு 323 பேரும், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் 685 பேருக்கு 428 பேரும் தேர்வு எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்