கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு

நெல்லை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு 8 மையங்களில் நடைபெற உள்ளது.

Update: 2022-11-30 21:45 GMT

வருவாய்த்துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட இணையவழி மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட தாசிலார்கள் மூலம் அவை சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டன. அந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பை ஏ.வி.ஆர்.எம்..வி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாங்குநேரி பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ராதாபுரம் புனித அன்னாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் தேர்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதன் அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத கருப்பு பால்பாயிண்ட் பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் பால்பாயிண்ட் பேனா தவிர வேறு எந்த பொருளையும் தேர்வறைக்கு கொண்டு செல்லக்கூடாது. செல்போன், புத்தகங்கள், பை மற்றும் வேறு எந்த சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. தேர்வு அறைக்குள் காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். 9.50 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்