3 ஆயிரத்து 757 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இதில் 3 ஆயிரத்து 757 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Update: 2022-12-03 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இதில் 3 ஆயிரத்து 757 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

கிராம உதவியாளர் பணி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த மாதம் 7-ந் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த பணியிடத்திற்கு மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரத்து 840 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 757 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 ஆயிரத்து 83 விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கான திறனறிவு தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி காலை 10 மணி முதல் 11 மணி வரை சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப்பள்ளியிலும், மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பொறியியல் கல்லூரியிலும், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியிலும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரியிலும், திருப்பத்தூர் புதுகாட்டாம்பூர் பிளாசா மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி அழகப்பா மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியிலும், சிங்கம்புணரி ஆர்.எம்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடைபெறுகிறது.

ஹால்டிக்கெட்

இதில் முதல் அரை மணி நேரம் தமிழ் மொழிக்கான எழுத்து திறனறிவு தேர்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறிவு தேர்வும் நடைபெறுகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்விற்கான ஹால்டிக்கெட் பதவிறக்கம் செய்தவற்கான லிங்க் செல்போன் எண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மூலம் வந்த விண்ணப்பங்களுக்கு பதிவு அஞ்சல் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக ஹால்டிக்கெட்டுடன் வரவேண்டும். பால் பாயிண்ட் பேனா மூலம் மட்டும் தேர்வு எழுத வேண்டும். மேலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள், செல்போன்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்களும் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்