விருதுநகர் வி.வி. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில் இந்திய சாதனைப்பதிவு மற்றும் ஆசிய சாதனை பதிவுக்காக பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகார பகிர்வுக்கான நீண்ட நேர பயிற்சி விருதுநகர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரை 3 மணி 15 நிமிடங்கள் ரோட்டரி சங்க பயிற்சியாளர்கள் மூலம் 3,500 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை ரோட்டரி மாவட்ட கவர்னர் இதயம் முத்து தொடங்கி வைத்தார். இப்பயிற்சியின்போது பெண்களின் முன்னேற்றம், பெண்களின் மேம்பாடு மற்றும் அதிகார பகிர்வு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் ஆசிய சாதனை பதிவு மற்றும் இந்திய சாதனை பதிவு பிரதிநிதியாக விவேக் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை உலக சாதனையாக அறிவித்தார்.