உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் சரண்யா விளக்கம் அளித்தார். சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உறுதிமொழி வாசிக்க அலுவலர்கள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.