உலக மனநல விழிப்புணர்வு பேரணி

கடலூரில் உலக மனநல விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

Update: 2022-10-10 18:45 GMT

கடலூர்

உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் வரவேற்றார்.

தொடர்ந்து இந்த பேரணி பாரதி சாலை, நெல்லிக்குப்பம் ரோடு வழியாக சென்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியை சென்றடைந்தது. பேரணியில் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை அகற்ற வேண்டும். மனநோய் மீதான மூட நம்பிக்கைகளை அகற்ற வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன. இது பற்றிய துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது.

பேரணியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமரன், மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மனநல டாக்டர்கள் கலையரசி, அஷ்வின் ஜோதி, தீபிகா, என்.எஸ்.எஸ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் சந்தானம், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் மலர்விழிவேலு மற்றும் ஆசிரியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்