லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் சாவு

ஓசூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-09-27 18:45 GMT

ஓசூர்

தொழிலாளர்கள்

ஒடிசா மாநிலம் ஜேன்கனல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிகந்தர் புட்டியா (வயது 30). அதேபோல், ஸ்ரீராம்பூர் பகுதியை சேர்ந்தவர் விட்ரக்ஸ் போகி (30). இவர்கள் இருவரும் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். வண்டியை லிட்ரக்ஸ் போகி ஓட்டிச்சென்றார். ஜிகந்தர் புட்டியா பின்னால் அமர்ந்திருந்தார். இந்நிலையில் ஓசூர் தர்கா அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு டாரஸ் லாரி மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லிட்ரக்ஸ் போகி, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ஜிகந்தர் புட்டியாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து, ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்