திருச்சுழி,
திருச்சுழி அருகே ம.வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் ரவிராமன் (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு குழந்தை இல்லாததால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் குருணைமருந்தை குடித்தார். உடனே அவரைமீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.