ஆடு மேய்த்த சிறுமிக்கு முத்தம் கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆடு மேய்த்த சிறுமிக்கு முத்தம் கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Update: 2022-06-15 19:08 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் பாண்டியனை கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், ஆடு மேய்த்த சிறுமிக்கு முத்தம் கொடுத்த பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்