தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
திருவாடானை அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தொண்டி,
திருவாடானை தாலுகா மங்கலக்குடியை அடுத்த துத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன். இவருடைய மகன் ஜஸ்டின் திரவியம் (வயது 38). கொத்தனார்.சம்பவ தினத்தன்று இவர் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் திருவாடானை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் ஜஸ்டின் திரவியம் பலத்த காயங்களுடன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
உடனே அவரை அவரது உறவினர்கள் தேவகோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உயிருக்கு போராடிய நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜஸ்டின் திரவியம் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஜஸ்டின் திரவியத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதனை தொடர்ந்து ஜஸ்டின் திரவியத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. இவருக்கு இருதய மேரி என்ற மனைவியையும், ஜெய்சன் (8), ஜெசிகா (5) என்ற குழந்தைகளும் உள்ளனர்.