கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி சாவு

மூங்கில்துறைப்பட்டு அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-05 19:38 GMT

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சின்னமணி (வயது 35). தொழிலாளி. முருகன் கோவிலில், நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அப்போது, கையில் பட்டாசு வைத்துக்கொண்டு, பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கையில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் சின்னமணி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சின்னமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்