தியாகதுருகத்தில் கார் மோதி தொழிலாளி பலி

தியாகதுருகத்தில் கார் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-12-09 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பெரியமாம்பட்டு ஜெயந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் நேற்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற கார் ஒன்று செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்