ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ெரயில் நிலையத்திற்கும், லட்சுமி ஆலை மேம்பாலத்திற்கும் இடைப்பட்ட ெரயில் தண்டவாள பகுதியில் ஆண் ஒருவர் காயத்துடன் கிடப்பதாக தூத்துக்குடி ெரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்தவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி நடராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்த செண்பகராஜ் (வயது 51) என்பதும், கூலி தொழிலாளியான இவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.