மரச்செக்கில் சிக்கி தொழிலாளி பலி

சோளிங்கரில் மரச்செக்கில் சிக்கிதொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-03-28 17:40 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு போர்டின்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் பஜார் பகுதியில் உள்ள எண்ணெய் மரச்செக்கில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலையில் சுரேஷ் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த மரச்செக்கில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்