மேச்சேரி :
மேச்சேரி அருகே உள்ள எறகுண்டப்பட்டியை சேர்ந்தவர் மனோஜ்குமர (வயது 29). நெசவுத்தொழிலாளி. இவருக்கு அகிலாண்டேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மனோஜ்குமார் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். கிணற்றில் குளித்தபோது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மனோஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.