பாம்பு கடித்து தொழிலாளி சாவு
பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47), விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 5-ந் தேதி இரவு தா.பழூர் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு தெருவிளக்கு இல்லாததால் சாலையில் கிடந்த பாம்பை சிவக்குமார் மிதித்துள்ளார். இதில், அவரது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ேமல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.