விபத்தில் தொழிலாளி சாவு

விபத்தில் தொழிலாளி சாவு;

Update:2022-08-17 00:25 IST

ராஜாக்கமங்கலம்:

மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது (வயது 60), சமையல் தொழிலாளி. சம்பவத்தன்று நாகர்கோவிலில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ராஜாக்கமங்கலத்தை அடுத்த ஆலங்கோட்டை அருகே வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

அதில் தேங்காப்பட்டணம் கல்வெட்டுவிளை பகுதியை சேர்ந்த விக்டரின் மகன் விபின் (24), அவரது நண்பர் மருதங்கோடு சாஸ்தான் கொற்றை பகுதியை சேர்ந்த சாபுமோன் என்பவரது மகன் ஜிஜோ (22) ஆகிய இருவரும் வந்தனர்.

இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பீர்முகமது படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

பீர்முகமதுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்